பதிவு / உள்ளிடவும்இந்த தளத்தில் காண: ஆங்கிலம் / தமிழ்

கல்வி மூலம் முனைவது

கிராமப்புற கல்வி ஏவுதள மையத்தின் குறிக்கோள் கிராமங்களில் கல்வி பயிற்றுவிக்கும் முறையை செம்மை படுத்துவது ஆகும். அங்கே பயிலும் குழந்தைகளின் மனதில் ஓர் எழுச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி அவர்களை தலைவர்கள் போலவும் முனைவோர் போலவும் சிந்திக்க தூண்டுவது எங்கள் எண்ணம்.

கல்விதனை கொண்டு பல புதுமைகளை படைக்கவும், பல சாதனைகளை உடைக்கவும் ஊக்குவிக்கின்றோம்.எங்களின் கனவு இவ்வாறு பயின்ற குழந்தைகள் தங்களின் சமூகத்தையும் இந்த நாட்டையும் ஒருங்கே மேம்படுத்த முனைய வேண்டும் என்பதாகும்.எத்துறையேனும் சரி. விவசாயம்,தொழில்,அரசியல்,சட்டம்,மருத்துவம்,கலை,அறிவியல்,விளையாட்டு மற்றும் பல.

எங்களை பற்றி

தற்கால தகவல் தொழில்நுட்பத்தின் துணையோடு கிராமங்களில் பல அறிவியல் கருத்தரங்குகளையும், பல கருவிகளின் செயல் முறை விளக்கங்களையும், பல தலைப்புகளில் திரையிடல்களையும், போட்டிகளையும், உரையாடல்களையும் நடத்துகின்றோம். குழந்தைகளின் பங்கேற்பை ஊக்குவிக்கின்றோம். அவர்களின் மனதில் எழும் கேள்விகளை விவாதிப்போம். அவர்களின் ஆர்வத்தை தூண்ட பல கேள்விகளை தருவோம்.

போதனை நோக்கங்கள்

கிராமப் கல்வி முறை புரட்சியை தொழில்நுட்பம் நடைபெற்ற மாபெரும் முன்னேற்றங்கள் மீதான அதிகப்படுத்தும். போன்ற உண்மையான வாழ்க்கை தயாரிப்பு ஆர்ப்பாட்டங்கள், பாத்திரம், நாடகங்கள், கருத்தரங்குகள் / பேச்சு, விளையாட்டுகள் / நடவடிக்கைகள், திரைப்பட காட்சிகள் மற்றும் நிகழ்வுகளை கேட்டார் என படைப்பு வழிமுறைகள் மூலம்.